கோவில்பட்டி, ஜன. 3: கோவில்பட்டியில் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம், தலைவர் விஜய்ஆனந்த் தலைமையில் நடந்தது. பொருளாளர் ராஜவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் செயலாளர் தேவதாஸ் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. செயலாளராக வரதராஜன், தனலட்சுமி மேச் ஒர்க்ஸ் தினேஷ் இணை செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு போப் தி கிங் மேச் பாக்டரி கருப்பசாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தீப்பெட்டி நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்க சிவகாசி சேம்பருடன் இணைந்து நடத்துவது, சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி செய்யவும், உபயோகிப்பதையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வரும் விஜய் ஆனந்த், நாகராஜன், பிலால் பாய், பரமசிவம், கோபால், லட்சுமணன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜ்குமார் நன்றி கூறினார்.
The post கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.