கொல்லங்கோடு அருகே கார் குளத்தில் பாய்ந்து கொத்தனார் சாவு 4 பேர் உயிர் தப்பினர்

நித்திரவிளை, ஜன.3: கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான அயிரை குளத்தில் சொகுசு கார் பாய்ந்ததில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான அயிரையை சேர்ந்தவர் ஷைஜு. ராணுவ வீரர். கடந்த 12 நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்துள்ளார். அவரது நண்பர்கள் பிரதீப் (43), சஜீவ், சஞ்சு, இன்னொருவர் என்று மொத்தம் 5 பேர் ஷைஜுவின் காரில் செங்கவிளையில் இருந்து வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தனர். ஷைஜு காரை ஓட்டி உள்ளார். அயிரை வலிய குளத்தின் அருகே சென்ற போது நிலைதடுமாறிய கார் எதிர்பாராதவிதமாக குளத்திற்குள் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் ஷைஜு, சஜீவ், சஞ்சு மற்றும் ஒருவர் என்று 4 பேர் கதவை திறந்து தப்பி விட்டனர். பிரதீப் காரினுள் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். கட்டுமான தொழிலாளியான பிரதீப்பிற்கு மனைவி, ஒரு ஆண், பெண் குழந்தைகள் உண்டு. குளத்தின் கரை பகுதியில் புதர் மண்டி கிடப்பதாலும், பக்க சுவர் இல்லாத காரணத்தாலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொழியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கொல்லங்கோடு அருகே கார் குளத்தில் பாய்ந்து கொத்தனார் சாவு 4 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: