கும்மிடிப்பூண்டி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டித்து பாமக கட்சியின் பசுமைத் தாயகத்தின் மாநிலத் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திட்டமிடப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்காமல் அனைவரையும் போலீசார் தடுத்தனர். அதையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியபோது சௌமியா அன்புமணியை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தொண்டர்களுடன் வைத்தனர். இதை அறிந்த கும்மிடிப்பூண்டி பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் சௌமியா அன்புமணி கைது கண்டித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் 13 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது எஸ்பி ஜெயஸ்ரீ மற்றும் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் வன்னியர் சங்க தலைவர் கேசவன், எளாவூர் கார்த்திக், கும்புளி தாஸ் உள்ளிட்ட 13 பாமக நிர்வாகிகளை கைது செய்து கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
The post கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது appeared first on Dinakaran.