காவல் நிலையத்தில் கழுத்தறுத்து கொண்ட போதை வாலிபர் கே.வி.குப்பத்தில் பரபரப்பு

கே.வி.குப்பம், டிச.28: கே.வி.குப்பம் காவல் நிலையம் எதிரே மதுபாட்டிலை உடைத்து கண்ணாடி துண்டால் கழுத்தறுத்து கொண்ட போதை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருத்த தனியார் பஸ் நேற்று இரவு கே.வி.குப்பம் காவல் நிலைய எதிரே வந்து நின்றது. பஸ்சில் இருந்து வாலிபர் ஒருவரை கீழே இறக்கி விட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர், அவர் பயணிகளிடம் போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த தனுஷ்(27) என தெரியவந்தது.

இதற்கிடையில் அந்த போதை வாலிபர் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு சென்றார். பின்னர், அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தியதுடன் பொதுமக்களிடம் வீண் ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து, அருகே குப்பையில் இருந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து, கண்ணாடி துண்டுகளால் தனக்கு தானே கழுத்தறுத்து கொண்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய தனுஷை போலீசார் மற்றும் அங்கிருந்த மக்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையம் எதிரே போதை வாலிபர் கழுத்தறுத்து கொண்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

The post காவல் நிலையத்தில் கழுத்தறுத்து கொண்ட போதை வாலிபர் கே.வி.குப்பத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: