3 கூடுதல் மருத்துவர்கள், 4 செவிலியர்கள் நியமனம் மருத்துவ அலுவலர் ஆய்வு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில்

பேரணாம்பட்டு, ஜன.3: பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே புதிய அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்ேதாறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்த செய்தி கடந்த 19ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. அதனடிப்படையில், நோயாளிகள் அமர இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்ட மருத்துவ அலுவலர் லட்சுமணன், பேரணாம்பட்டு புதிய அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் மருந்து, மாத்திரை இருப்புகளை சரிபார்த்தார். அதன் பின்னர், பழைய அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின்னர் மாவட்ட மருத்துவ அலுவலர் லட்சுமணன் கூறுகையில், ‘கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 3 (பொறுப்பு) மருத்துவர்கள், 4 செவிலியர்கள், 2 வார்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதலாக 2 செவிலியர்கள் நியமிக்க கோரி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்’ என கூறினார். ஆய்வின் போது இனை இயக்குனர். மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

The post 3 கூடுதல் மருத்துவர்கள், 4 செவிலியர்கள் நியமனம் மருத்துவ அலுவலர் ஆய்வு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் appeared first on Dinakaran.

Related Stories: