நெல்லை தொழிலதிபர் வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்க நாணயம் கொள்ளை

நெல்லை: தொழிலதிபர் வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க நாணயங்கள் ெகாள்ளை போனது. நெல்லை பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்ட் சாலையில் வசிப்பவர் ரஞ்சன் (42). சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள், நெல்லையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். ரஞ்சன் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். இவரது வீட்டு பீரோவில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் வைத்திருந்துள்ளார். நகை செய்வதற்காக சமீபத்தில் தங்க நாணயங்களை எண்ணிப் பார்த்தபோது பெருமளவில் குறைந்துள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஹைகிரவுண்ட் போலீசில் புகார் அளித்தார். அதில், தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். இதை பயன்படுத்தி வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 கோடி மதிப்புள்ள 2 கிலா 200 கிராம் தங்க நாணயங்களை மர்ம நபர்கள் திருடியுள்ளனர் என தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினர். சந்தேகத்தின் பேரில் வீட்டில் வேலை செய்யும் பெண் மற்றும் ஆண் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களாக சிறிது, சிறிதாக தொழிலதிபரின் வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க நாணயங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post நெல்லை தொழிலதிபர் வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்க நாணயம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: