இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பேஸ்புக் பக்கத்தில் அரசுக்கு எதிராக காவலர் அன்பரசன் கருத்து பதிவு செய்துள்ளார். இது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது. மேலும் பேஸ்புக் பக்கத்திலிருந்த அவரது கருத்து நீக்கப்பட்டதுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’ என்றனர்.
The post அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்; பேஸ்புக்கில் பதிவு செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.