போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரத்தில் சென்டாக் ஊழியர், முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? மாணவியின் தந்தை ஆதாரங்களுடன் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு போலி சான்றிதழ் அளித்ததாக 69 மாணவர்கள் மீது லாஸ்பேட்ைட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்விவகாரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் நீக்கப்பட்டதோடு, 19 மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையம் வரவழைத்து விசாரிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரத்தில் சென்டாக் நிர்வாகமும், காவல்துறையும் முழுமையான விசாரணையில் இறங்கினால் ஊழியர்களும் வழக்கில் சிக்குவர் என பாதிக்கப்பட்ட மாணவர், பெற்றோர்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட கல்வித்துறை செயலர் ஜவஹர் மற்றும் காவல்துறை வடக்கு கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை இப் புகாரை ஆதாரங்களுடன் அளித்துள்ளார்.

The post போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரத்தில் சென்டாக் ஊழியர், முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? மாணவியின் தந்தை ஆதாரங்களுடன் புகார் appeared first on Dinakaran.

Related Stories: