தொழில் முனைவோர் மேம்பாடு சார்பில் மின்னணு வர்த்தகம் குறித்து 3 நாள் பயிற்சி

சென்னை: தொழில் முனைவோர் மேம்பாடு சார்பில் மின்னணு வர்த்தகம் குறித்து 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் ‘மின்னணு வர்த்தகம்’ என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பை வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனத்தின் வளாகத்தில் நடத்த உள்ளது. இதில் மின்னணு வர்த்தகம் அறிமுகம், உங்கள் இணையவழி வர்த்தகத்தை அமைத்தல், மின்வணிக தளத்தை தேர்ந்தெடுக்குதல், டொமைன் மற்றும் ஹோஸ்டிங், உங்கள் கடையை வடிவமைத்தல், தயாரிப்பு மேலாண்மை மற்றும் சரக்கு கையாளுதல், மின்வணிகத்திற்கு சந்தைப்படுத்துதல், செயல்பாடுகள் மற்றும் தளவாட மேலாண்மை, மின்வணிக நிதி மேலாண்மை, வளர்ச்சி மற்றும் விரிவாக்கமும் உள்ளிட்ட பாடப்பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும் முன்பதிவு தகவலுக்கு, இணையதளமான www.editn.in மற்றும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை 9080609808, 9841693060, 9677152265 மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தொழில் முனைவோர் மேம்பாடு சார்பில் மின்னணு வர்த்தகம் குறித்து 3 நாள் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: