மருத்துவ படிப்பு இடங்கள் காலியாக இருக்க கூடாது: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கட்டணத்தை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் நிரம்பவில்லை. கடந்த ஆண்டு 1003 மருத்துவ படிப்பு இடங்கள் காலியாக இருந்தன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது,’ மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்கள் ஒருபோதும் காலியாக இருக்கக் கூடாது. இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உட்பட அனைத்து தரப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் தலைமையில் அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதில் உறுதியான நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்னையை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் மாதம் ஒத்திவைத்தனர்.

The post மருத்துவ படிப்பு இடங்கள் காலியாக இருக்க கூடாது: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: