பின்னர் அவர் அளித்த பேட்டி: பெருந்திட்ட வளாக பணியில் ஹெச்சிஎல் நிறுவனம் எடுத்துக் கொண்டுள்ள 20 பணிகளில் 3 பணிகள் முடிந்து திறப்பு விழா நடந்துள்ளது. ராஜகோபுர பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. வரும் 20ம் தேதி ஏழு கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற இருக்கிறது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின்படி 122 பக்தர்கள் தங்கும் அறைகள் கட்டப்பட இருக்கின்றன. ஏ மற்றும் பி பிரிவில் 56 பக்தர்கள் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவு பெற்று முதல்வரால் திறந்து வைக்கப்படும். 2025 இறுதிக்குள் கோயிலில் அனைத்து பணிகளும் நிறைவு பெறும். கோயில்களில் திருக்குறள் படிப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
வரும் ஜூலை 7ம் தேதி திருக்கோயில் குடமுழுக்கு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. முழு பணிகளும் முடிவடையும்போது வடக்கே வாரணாசி போன்ற திருக்கோயில்களில் உள்ளதுபோல் பக்தர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post திருச்செந்தூர் கோயிலில் 7 கோபுரங்களுக்கு 20ம் தேதி பாலாலயம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.