பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்ய ₹77 கோடி ஒதுக்கீடு:வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
2025ம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக்கரும்பு ஆகியவற்றை 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு ஏதுவாக ரூ.249 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முழு கரும்பு கொள்முதலுக்காக கரும்பு ஒன்றிற்கு ரூ.35 வீதம் (போக்குவரத்து செலவினம், வெட்டு கூலி, கட்டுக்கடும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு, விவசாயிகளுக்கு வழங்கும் தொகை உட்பட) நிர்ணயிக்கப்பட்டு ரூ.77 கோடியே 33 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் :
* நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நின்று பரிசு தொகுப்பினை பெற்று கொள்ள ஏதுவாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை உதவியுடம் மேற்கொள்ள வேண்டும்.
* பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட தேவையான கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்ய ₹77 கோடி ஒதுக்கீடு:வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: