சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக, மீட்டார்களைக் கொள்முதல் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டரை மின்வாரியம் ரத்து செய்தது. மிகவும் குறைவான தொகையைக் குறிப்பிட்டு இருந்த அதானி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.