மேலும் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகள் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்கில் சைவம் – வைணவ குறித்தான புத்தகம், சிற்பக்கலைகள், நாயன்மார் கதைகள், விவேகானந்தர் கதை, ராமானுஜர் கதை, திருப்புகழ், திருவள்ளுவர், சேக்கிழார் உள்ளிட்டோர் புத்தகம் என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அதிக அளவில் பக்தி புத்தகத்தை வாங்கி செல்வதாகவும் அதிகமாக கோயில் தளங்கள் குறித்தான புத்தகம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அரங்கு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல முதல்முறையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவுத்தம் சார்ந்த புத்தகம், அம்பேத்கர் வரலாறு, பகுத்தறிவு நூல்கள், ஆதிதிராவிடத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் புத்தகம், சிறுகதை உள்ளிட்ட புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது என அரங்கு பொறுப்பாளர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்கில் 1 முதல் 12ம் வகுப்பு வரைக்கு தேவையான புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு தேவையான அனைத்து புத்தகத்தை பெற்றோர் வாங்கி செல்கின்றனர். தொடங்கிய 7 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.
இன்றைய நிகழ்ச்சி..
கற்பதும், நிற்பதும் என்ற தலைப்பில் சுகி சிவம், தமிழ் விடும் தூது என்ற தலைப்பில் ஆறு. அழகப்பன், கதைகளிடம் கற்போம் என்ற தலைப்பில் ராமகிருஷ்ணன் பேச உள்ளனர்.
The post நந்தனம் ஒய்எம்சிஏ 48வது புத்தகக் காட்சியில் அரசுத்துறை அரங்குகளுக்கு மக்களிடம் வரவேற்பு: 7 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை appeared first on Dinakaran.