‘கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் உண்மை விசுவாசிகள்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் குறுநில மன்னர் போல் கழக நிர்வாகிகளை அடிமைப்படுத்தியும், ஒரு சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தராமலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும், பாஜவிற்கு அடுத்து மூன்றாவது இடத்திற்கு அதிமுகவை படுகுழியில் தள்ளிய சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனை மாற்றி, சிவகங்கை மாவட்டத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.
எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அவ்வபொழுது போஸ்டர் ஒட்டுவது வழக்கம். ஆனால் அதிமுகவிலேயே மாவட்டச் செயலாளருக்கு எதிராக அக்கட்சியினரே போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனை நீக்கக்கோரி நிர்வாகிகள் போஸ்டர்: சிவகங்கையில் பரபரப்பு appeared first on Dinakaran.