அரசு பேருந்துகளில் முன்பதிவு குலுக்கல் முறையில் 13 பயணிகள் தேர்வு: மூவருக்கு தலா ரூ.10 ஆயிரம்

சென்னை: அரசு பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு செய்த 13 பயணிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான www.tnstc.in, டிஎன்எஸ்டிசி செயலி ஆகியவை மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகிறது.

இதனை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் 3 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த டிசம்பர் மாதத்திற்கான 13 வெற்றியாளர்களை குலுக்கல் முறையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று தேர்வு செய்தார், தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பயணிகளுக்கு பரிசுகள் விரைவில் வழங்கப்படும்.

The post அரசு பேருந்துகளில் முன்பதிவு குலுக்கல் முறையில் 13 பயணிகள் தேர்வு: மூவருக்கு தலா ரூ.10 ஆயிரம் appeared first on Dinakaran.

Related Stories: