இதுதொடர்பாக, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் 2025 ஜனவரி 10ம் தேதிக்குள் சுங்கத்துறையின் என்சிடிசி-பேக்ஸ் மையத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், சர்வதேச விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, அதில் பயணிக்கும் பயணிகளின் முழு விவரங்களையும் ஏப்ரல் 1 முதல் சுங்கத்துறையுடன் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். தவறினால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.
பயணிகள் பெயர் பதிவு தகவல் விதிமுறைகள் 2022ன் படி சர்வதேச பயணிகளின் தரவுகளை சுங்க அதிகாரிகளுடன் விமான நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதில், பயணிகளின் பெயர், டிக்கெட் கட்டணம் செலுத்திய கிரெடிட் கார்டு உள்ளிட்ட தகவல், டிக்கெட் வழங்கிய தேதி, பயணம் செய்யும் நாடு, பிற பயணிகளின் பெயர்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். இதற்கு இணங்கத் தவறினால் ஒவ்வொரு விதிமீறலுக்கு ₹25 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
The post வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் தரவை கட்டாயம் தர வேண்டும்: விமான நிறுவனங்களுக்கு சுங்கத்துறை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.