புதுடெல்லி: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் போக்குவரத்து காவலராக 8 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 2023ல் விருப்ப ஓய்வு பெற்றவர் சவுரப் சர்மா. இவரிடம் பலகோடி பணம் குவிந்து இருப்பதாக வந்த புகார் அடிப்படையில் சவுரப் சர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்தன்சிங் கவுர், ரோகித்திவாரி, சரத் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி 52 கிலோ தங்கம், ₹14 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கடந்த 27ம் தேதி போபால், குவாலியர், ஜபல்பூரில் உள்ள சுமார் 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. அப்போது ₹23 கோடி அசையா சொத்துக்கள், ₹4 கோடி வங்கி டெபாசிட், ₹6 கோடி அசையும் சொத்துக்கள் என மேலும் ₹33 கோடி மதிப்புள்ள சொத்துகளை குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
The post 52 கிலோ தங்கம், ரூ.14 கோடி ரொக்கம் பிடிபட்ட நிலையில் மபி போக்குவரத்து காவலர் ரூ.33 கோடி சொத்து குவிப்பு: அமலாக்கத்துறை சோதனையில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.