இந்த நிலையில் பா.ஜ ஐடி விங் தலைவர் அமித்மாளவியா தனது எக்ஸ் பதிவில்,’ முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மறைவுக்கு நாடு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், ராகுல்காந்தி புத்தாண்டை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார். மன்மோகன்சிங்கின் மரணத்தை அவர் தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார். ஆனால் மன்மோகன்சிங் மீதான அவரது அவமதிப்பு தவிர்க்க முடியாதது. காந்திகளும், காங்கிரசும் சீக்கியர்களை வெறுக்கிறார்கள். தர்பார் சாஹிப்பை இந்திரா காந்தி இழிவுபடுத்தினார் என்பதை ஒருபோதும் மறந்துவிட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குக் பதிலளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ‘இந்த திசை திருப்பல் அரசியலை சங்கிகள் எப்போது நிறுத்துவார்கள்? யமுனை கரையில் மன்மோகன்சிங் உடலை தகனம் செய்ய இடமளிக்க பிரதமர் மோடி மறுத்தது, அவரது அமைச்சர்கள் மன்மோகன்சிங் குடும்பத்தை நடத்தியவிதம் மிகவும் அவமானகரமானது. ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் பயணம் செய்தால், அது உங்களை எந்தவிதத்தில் தொந்தரவு செய்கிறது?. புத்தாண்டிலாவது நலமடைய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மன்மோகனுக்கு நாடு முழுவதும் அஞ்சலி; புத்தாண்டு கொண்டாட ராகுல் வெளிநாடு பயணம்: பா.ஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.