மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரதிபா சிங் மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “பாதிக்கப்பட்ட சிறுமி தானாக முன்வந்து குற்றம் சாட்டப்பட்டவருடன் சென்றுள்ளார். அப்போது பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
பாலியல் உறவு என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் மட்டுமே, அது கண்டிப்பாக பாலியல் துன்புறுத்தல் என்று ஆகிவிடாது. மேலும் இதனை விசாரணை நீதிமன்றம் எப்படி முடிவு செய்தது என்பது குறித்து அவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை. இதில் ஒருவேளை பாலியல் துன்புறுத்தல், பாலியல் உறவில் இருந்திருந்தால், அதற்கான ஆதாரங்களை காட்டியிருக்க வேண்டும். வெறும் அச்சத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கக் முடியாது.
குறிப்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தில் பாலியல் உடல் உறவு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்பது குறித்து தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. போக்சோ சட்டப் பிரிவுகளின் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் முன்னதாக அளித்திருந்த தீர்ப்பு மற்றும் தண்டனை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள்” மேல்முறையீட்டு மனுதாரரை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே துன்புறுத்தல் ஆகாது: டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.