தேனியில் சிறுபால பணிக்காக ஜனவரி 2 முதல் போக்குவரத்து மாற்றம்

தேனி, டிச.31: தேனி நகர் பழைய பஸ்நிலையம் அருகே சிறுபாலம் கட்டுவதால் போக்குவரத்தில் நாளை மறுதினம்(2ம்தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள தகவலில், தேனி நகர் பழைய பஸ்நிலையம் அருகே கம்பம் சாலையில் ராஜவாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.

இப்பாலம் கடும் பணிக்காக தேனியில் இருந்து கம்பம், போடி செல்லும் வாகனங்கள் ஒருவழிப்பாதையாக பழைய பஸ் நிலையம் வழியாக உள்சென்று, வெளி செல்ல வேண்டும். கம்பம், மற்றும் போடி பகுதியில் இருந்து தேனிக்கு வரும் வாகனங்கள் தற்போதுள்ள வழித்தடத்திலேயே பஸ்நிலையத்திற்குள் செல்லாமல் நேரு சிலை வழியாக செல்ல வேண்டும். இப்போக்குவரத்து வழித்தட மாற்றம் வருகிற 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

The post தேனியில் சிறுபால பணிக்காக ஜனவரி 2 முதல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: