காவேரிப்பட்டணம், ஜன.3: காவேரிப்பட்டணம் சக்தி விநாயகர் கோயிலில், பொங்கல் பொங்கல் திருவிழாவையொட்டி 15ம் தேதி மற்றும் 16ம் தேதி எருதாட்டம் மற்றும் ஊர் அழைப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு கூலி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். நேற்று சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை, வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் ஆய்வு மேற்கொண்டார். கூலி ஆட்டம் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, தாசில்தார் வளர்மதி, தீயணைப்புத்துறை அலுவலர் சக்திவேல், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் பாக்யா, கால்நடை அதிகாரிகள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாமணி, சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாகிகள் உடனிருந்தனர். மகேந்திரன், தக்காளி தவமணி, பூபாலன், சார்லஸ், குமரேசன், மனோகரன், சின்னசாமி, பவுன்ராஜ் பசுபதி, கமலக்கண்ணன், செல்வம், விஜி, பரசுராமன், சந்தோஷ், பிரவீன், குணாளன், சீனிவாசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆர்டிஓ ஆய்வு appeared first on Dinakaran.