கடந்த ஒரு வார காலமாக இந்த சாலையை தனிநபர்கள் மறித்து வருகிறார்கள். காம்பவுண்ட் சுவர் அமைக்க ஆயத்த வேலைகளும் நடைபெற்று வருகிறது. மேலும், எங்களை இந்த பாதை வழியாக வரக்கூடாது என மிரட்டுகிறார்கள். நகராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இது குறித்து மதுராந்தகம் கோட்டாட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து வழி பாதையும், குடிநீர் இணைப்பையும் மீட்டு தருமாறு கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனு வழங்கும்போது, வன்கொடுமை தடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு விழிப்பு குழு உறுப்பினர் ஜி.ஜெ.பிரபாகரன் அப்பகுதி திமுக கவுன்சிலர் சசிகுமார், சமூக ஆர்வலர் ஆனந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post இருளர் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு appeared first on Dinakaran.