கடப்பாக்கத்தில் சமத்துவ பொங்கல் விழா துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: செயற்குழு கூட்டத்தில் முடுவு

காஞ்சிபுரம்: கடப்பாக்கத்தில் வரும் 12ம்தேதி நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் இனியரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம் எம்பி, மலர்விழி, டிவி கோகுலகண்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வரும் 12ம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடப்பாக்கம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில், துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது, தை தமிழ் புத்தாண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அறிவித்ததன்படி திராவிட மாடல் நல்லாட்சியில் சமத்துவ பொங்கல் விழாவை மாவட்டத்தில் உள்ள கிளை கழகங்கள் தோறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என காஞ்சிபுரம் தெற்கு தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மில்லேனியம் ஆண்டு 2020 டிசம்பர் 31ல் ஐயன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிவு சிலையாக அறிவித்து விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் கண்ணாடி பாலம் அமைத்து திருவள்ளுவரின் புகழ் போற்றி 2025ஐ சிறப்புடன் வரவேற்ற தமிழ்நாடு அமைச்சருக்கு தெற்கு மாவட்ட திமுக நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்களை விளக்கி மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பேசினார்.

இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ ஏழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், குமணன், சேகர், குமார், சத்ய சாய் கண்ணன், தம்பு, சிவக்குமார், ஏழுமலை, சிற்றரசு, சுந்தரமூர்த்தி, எழிலரசன், சரவணன், பேரூர் செயலாளர்கள் பாண்டியன், பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், நாகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை சசிகுமார் சிகாமணி, சீனிவாசன், இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மகளிர் அணி அமைப்பாளர் செல்வி, மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், ராம் பிரசாத், தமிழ்செல்வன், நிர்வாகிகள் நாத்திகம் நாகராஜன், செவிலிமேடு மோகன், மாநகர நிர்வாகிகள் முத்துசெல்வன், ஜெகநாதன், சுப்பராயன், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன், திலகர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கடப்பாக்கத்தில் சமத்துவ பொங்கல் விழா துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: செயற்குழு கூட்டத்தில் முடுவு appeared first on Dinakaran.

Related Stories: