குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 8ம் தேதி முதல் தொடக்கம்

 

ஈரோடு, டிச. 31: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் குரூப்-4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 8ம் தேதி தொடங்கவுள்ளன. சிறந்த பயிற்றுனர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஸ்மார்ட் போர்டு, இலவச ‘வை-பை’ வசதி, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள்,

பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணையவழி தேர்வுகள், முழுமையான மாதிரி தேர்வுகள், மென்பாடக் குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதியுடன் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  எனவே, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/3FNSWCaHj9CKRqwW6 எனும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

The post குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 8ம் தேதி முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: