ஈரோடு, டிச. 31: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அண்ணா சாலை குறுக்கு சாலையில் ஒருவரது வீட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அந்தியூர் போலீசார் அங்கு சென்று அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் மருதராஜ் (30), சேலம் மாவட்டம் சங்ககிரி பெருமாபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் மகன் தளபதி (26) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 11 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.7,040 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அந்தியூரை சேர்ந்த கோகுல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.