ஈரோடு,டிச.28: ஈரோடு வ.உ.சி பூங்காவில் மகாவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில்,ஆண்டுந்தோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டிற்கான அனுமன் ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள்.
அவர்களுக்கு லட்டு,செந்தூரம், கல்கண்டு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனையொட்டி, ஈரோட்டில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழு சார்பில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் நடைபெற்று வரும் இந்த பணியில் சுமார் 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளதாக குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
The post அனுமன் ஜெயந்தி விழா 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.