ஈரோடு, ஜன. 1: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுத்திட, போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். இதில், ஆப்பக்கூடல் அத்தாணி கைகாட்டி பாலம் அருகே மது விற்றதாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்த ரமேஷ் (42), அம்மாபேட்டை குறிச்சி பகுதியில் அந்தியூரை சேர்ந்த மனோகரன் (53), செம்மாண்டாம்பாளையத்தை சேர்ந்த பானிசாமி (54), கோபி அருகே குய்யனூரில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்நத் குணசேகர் (39), பவானி குதிரைக்கல்மேட்டில் வேலுசாமி (42), ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, 86 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
The post சட்ட விரோத மது விற்பனை: 5 பேர் கைது appeared first on Dinakaran.