ஈரோடு, டிச. 30: ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வங்க தேசம் பர்கனாஸ் பகுதியை சேர்ந்த மொமின் மிஸ்டிரி (26), என்பவரை கைது செய்து, 440 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு டீசல் செட் பஸ் ஸ்டாப் பகுதியில் புதுமைக்காலனியை சேர்ந்த முகமது அபுல்கலாம் (24), என்பவரை போலீசார் கைது செய்து, 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பர்கூர் ஈரெட்டி பகுதியில் 100 கிராம் கஞ்சா தூளை விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணப்பன் (64), என்பவரை போலீசார் கைது செய்தனர்.
The post கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.