ஈரோடு, டிச.25: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எம்மாம்பூண்டியிலிருந்து மேட்டுக்கடை செல்லும் ரோட்டில் உள்ள ஒத்தப்பனை மர மேடு என்னும் பகுதியில் ஒரு நபர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒழலக்கோவில், மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25) என்பவரை கையும், களவுமாக பிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
The post சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது appeared first on Dinakaran.