காரிமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு

காரிமங்கலம், டிச.31: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான அடிலம், கோவிலூர், பெரியாம்பட்டி, பேகாரஅள்ளி, திண்டல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டையொட்டி, கடந்த சில நாட்களாக பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. நேற்று சன்னமல்லி கிலோ ₹1400க்கும், கனகாம்பரம் ₹1000க்கும், குண்டுமல்லி ₹800க்கும், ஜாதிமல்லி ₹550, அரளி ₹300, பன்னீர் ரோஸ் ₹200, சம்பங்கி ₹180, சாமந்தி ₹80க்கு விற்பனையானது. தொடர்மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்ததாகவும், வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post காரிமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: