ராதாபுரம் அருகே டாரஸ் லாரி பாலத்தில் மோதி கவிழ்ந்தது

ராதாபுரம்,டிச.31: ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலையில் சீலாத்திகுளத்தில் அமைந்துள்ள கல்குவாரியிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலையில் மார்த்தாண்டம் நோக்கி டாரஸ் லாரி சென்றது. ராதாபுரம் அருகே அதிவேகமாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வளைவில் இருந்த பாலத்தில் மோதி டாரஸ் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டாரஸ் லாரியின் முன் பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இருந்தபோதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தைச்சேர்ந்த லாரி ஓட்டுநர் பவின் மற்றும் கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வளைவு குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால் தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ராதாபுரம் அருகே டாரஸ் லாரி பாலத்தில் மோதி கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: