திருச்செந்தூர் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு

திருச்செந்தூர்,டிச.28: காஞ்சிபுரத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் கடலில் நீராடினர். அப்போது அதில் வந்த முத்துலட்சுமி (58) என்ற பக்தர் கடல் அலையின் சீற்றத்தில் சிக்கினார். மேலும் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவரை பத்திரமாக மீட்டு கோயில் முதலுதவி மையத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

The post திருச்செந்தூர் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு appeared first on Dinakaran.

Related Stories: