கீரமங்கலம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் இருந்து இளைஞர் உடல் மீட்பு

 

புதுக்கோட்டை, டிச.28: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சுண்டாங்கிவலசை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் அவினேஷ் (21). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் இரவு வீட்டிற்குச் செல்லவில்லை. அதனால் அவரது தாயார் அவினேஷ் நண்பர்களிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு உறவினர், நண்பர்கள் அந்தப்பகுதியில் தேடியுள்ளனர். அப்போது குளமங்கலம் வடக்கு கிராமத்தில் புதர்கள் அடர்ந்த ஆழமான கிணற்றில் அவினேஷ் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இளைஞர் அவினேஷ் எதற்காக இந்தப் பகுதிக்கு வந்தார் அல்லது வேறு யாரேனும் அழைத்து வந்து தள்ளிவிட்டனரா என்று விசாரனை செய்து வருகின்றனர்.

The post கீரமங்கலம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் இருந்து இளைஞர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: