மக்கள் நீதி மய்யம் சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

 

நாகப்பட்டினம்,டிச.28 :மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகப்பட்டினத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலை ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் செய்யதுஅனஸ் தலைமை வகித்தார்.

நாகப்பட்டினம் ஒன்றிய செயலாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் நம்பியார் நகரில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். நாகப்பட்டினம் நகர துணை செயலாளர் சிவப்பதசேகர், மகளிர் அணி துணை மாவட்ட அமைப்பாளர்கள் மாலினி, போதும்பொன், வார்டு செயலாளர் சங்கர்ஞானஒளி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் நீதி மய்யம் சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: