தஞ்சாவூர், டிச. 28: தஞ்சாவூர் சைவ வேளாளர் சங்க 42-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கந்தசாமி தலைமை தாங்கினார். தொடக்கத்தில் மங்கள சந்திப்பு நேர்காணல் நடைபெற்றது. குழந்தைகள் மாறுவேட போட்டி, குழந்தைகள் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வசந்தா ஆறுமுகம் வரவேற்றார். ராமச்சந்திரன் ரவி, கோவிந்தராஜ், சண்முக சுந்தரம், தியாகராஜன் நாகட்சணாமூர்த்தி, தட்சணா மூர்த்தி, ஆகியோர் சங்க செயல்பாடுகள் பற்றி பேசினர்.
கும்பகோணம் ராஜராஜன், சுவாமிநாதன், திருவாரூர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .கும்பகோணம் சபா சண்முகசுந்தர தேசிகர் பேசினார். விழாவில் 75 ஆண்டு நிரம்பிய தம்பதியர்கள், பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஜெயகீதா தொகுத்து வழங்கினார். உஷா கனகசபை நன்றி கூறினார்.
The post தஞ்சாவூரில் சைவ வேளாளர் சங்க 42-வது ஆண்டு விழா appeared first on Dinakaran.