தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததால் நண்பனை அடித்து கொன்ற தொழிலாளி

அண்ணாநகர், டிச.28: சென்னை டி.பி.சத்தரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (40). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (37). இவருக்கும் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மோகன்ராஜிக்கும், மீனாட்சிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும், அமைந்தகரை முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில், கடந்த ஒரு வாரமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், மோகன்ராஜ் தனது நெருங்கிய நண்பரான டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் (40) என்பவரை நேற்று முன்தினம் இரவு மது அருந்த வீட்டிற்கு அழைத்துள்ளார்.

பின்னர், மோகன்ராஜ் இவரது கள்ளக்காதலி மீனாட்சி மற்றும் ராமசந்தின் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் மூவரும் அங்கேயே தூங்கினர். நள்ளிரவில் ராமச்சந்திரன் விழித்து பார்த்தபோது, மீனாட்சியும், ராமச்சந்திரனும் உல்லாசமாக இருப்பது தெரிந்தது. இதனால், ஆத்திரமடைந்து ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த ராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் அலறி கூச்சலிட்டார். தகவலறிந்த அக்கம் பக்கத்தனர், அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் ராமசந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசந்திரன் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜை கைது செய்தனர்.

The post தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததால் நண்பனை அடித்து கொன்ற தொழிலாளி appeared first on Dinakaran.

Related Stories: