தஞ்சாவூர், டிச.27: தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் செஞ்சுருள் சங்கம், தொண்டாரம்பட்டு, வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமை கல்லூரி முதன்மையர் பேராசிரியர் முனைவர் ஜெகன்மோகன் துவக்கி வைத்து மாணவர்களை ரத்த தான முகாமில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு ரத்த தானம் செய்ய உற்சாகப்படுத்தினார்.
வட்டார மருத்துவ அதிகாரி மருத்துவர் ராஜராஜன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் கிஷோர் ஆகியோர் ரத்த தானத்தின் முக்கியத்துவம், அதனால் சமூகம் அடையும் பலன்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முகாமில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியை வேளாண் கல்லூரியின் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் முனைவர் ஜெயசங்கர் ஒருங்கிணைத்தார்.
The post ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.