ஏரலில் ஐயப்ப பவனி விழா

ஏரல், டிச.28: ஏரல் மணிகண்டன் யாத்திரை குழு சார்பில் 41வது மண்டல பூஜை விழா சிவன் கோயில் வளாகத்தில் நடந்தது. இதனை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து பால் குடம் எடுத்து வருதல், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை கூட்டு வழிபாடு நடந்தது. மதியம் திருவிளக்கு வழிபாடு, ஐயப்பனுக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு தீபாராதனை பூஜை, தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் ஐயப்பன் பொன்சப்பரம் எழுந்தருளி ஏரல் நகர் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு நடந்த கன்னிபூஜையில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். விழாவிற்கான ஏற்பாடுகளை குருசாமிகள் ராம்தாஸ், மாரிமுத்து மற்றும் மணிகண்டன் யாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.எதிர்காலத்திற்கு ஏற்ப செயல்படுவோம்.

The post ஏரலில் ஐயப்ப பவனி விழா appeared first on Dinakaran.

Related Stories: