வைகுண்டம்,டிச.28: வைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. வைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் ₹30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிட திறப்பு விழாவிற்கு விவசாய சங்கத்தலைவரும் பத்மநாபமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான வைகுண்ட பாண்டியன் திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னத்துரை, சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஒன்றிய பொறியாளர் பீர்முகமது, தொழிலதிபர் பிரம்மசக்தி கருப்பசாமி, ஊராட்சிசெயலாளர், பம்பு பொருத்துனர் யூசுப், வேலாயுதம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post பத்மநாபமங்கலத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா appeared first on Dinakaran.