பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2024-25ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பணிகள் தொடக்க விழா

பெரம்பலூர், டிச.27: எறையூர் சர்க்கரை ஆலையில் 2 லட்சம் மெட்ரிக் டன் கரும்புகளை அரவை செய்யவும், ஆலை சராசரி சர்க்கரை கட்டுமானம் 9.75 சதவீதம் எய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என பெரம்பலூர் சர்க்கரை ஆலை அரவை பணியை தொடங்கி வைத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, எறையூர் சர்க்கரை ஆலையின் அரவைப் பணி களுக்கான தொடக்க விழா நேற்று(26 ம்தேதி) பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடை பெற் றது. எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ் வரவேற்றார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி கே.என். அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்டஊராட்சி தலைவர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலை அரவை பணியை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து சர்க்கரை ஆலையைப் பார்வையிட்ட பிறகு செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது :
பொதுத்துறை நிறுவன மான பெரம்பலூர் சர்க்கரைஆலை, தமிழ்நாடு அரசின் சர்க்கரைக் கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1975ம் ஆண்டு அடிக்கல் நாட்டப் பட்டு, 1978ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 2010ம் ஆண்டு எறையூர் சர்க்கரை ஆலையில் 18 மெகாவாட் இணைமின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட்டு, 2019ம் ஆண்டு முதல் இணை மின் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, 2024-25ம் ஆண்டிற் கான அரவைப் பருவம் இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரும்பு அரவை இது வருகிற மார்ச் 8ம்தேதி வரை நடைபெற உள்ளது. 2 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்திடவும், ஆலை சராசரி சர்க்கரை கட்டுமானம் 9.75சதவீதம் எய்திடவும் திட்டமிடப் பட்டுள்ளது. தினசரி முழு அளவை திறனுடன் அரவைசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் ஊக்கத் தொகையாக 2020-21ம் ஆண்டிற்கு ரூ.192.50ம், 2021-22ம் ஆண்டிற்கு ரூ.195ம், 2022-23ம் ஆண்டிற்கு ரூ195ம் 2023-24ம் ஆண்டிற்கு ரூ215ம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த அரவைப் பருவத்தில் அரவை செய்த கரும்பிற்காக ரூ.71 கோடி கிரையத் தொகையாக வழங்கப் பட்டுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 2.39 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு அரவைக்காக 3,380 பயனாளிகளுக்கு ரூ.5.13 கோடி கரும்பு அரவைத் தொகை வழங்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கரும்பு அரவையில் கூடுதல் இலக்கு எட்டப்பட்டு விவசாயிகளுக்கு அரவைத்தொகை வழங்கப் படும். பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் பரப்பு விரிவாக்கம் செய் திட தமிழ்நாடு சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளபடி, நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளுக் கான தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முறையில் செயல் படுத்தி வருகிறார். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, வேப்பந்தட்டை ஒன்றியக் குழுத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்தமிழ்ச் செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சி கவுன்சி லர்கள் தழுதாழை பாஸ்கர், மகாதேவி ஜெயபால், அட்மாதலைவர் ஜெகதீசன், வேப்பந்தட்டை தாசில்தார் மாயகிருஷ்ணன், எறையூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி ராம்குமார் மற்றும் விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார் சர்க்கரை கட்டுமானம் 9.75% எட்ட இலக்கு

The post பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2024-25ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பணிகள் தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: