இந்த நிலையில் தான் அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தங்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது அதன் அண்டை நாடான பாகிஸ்தான். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாகிஸ்தான் தலிபான் கிளர்ச்சி அமைப்பு தங்கள் மீது தாக்கி வருவதாக குற்றம் சாட்டுகிறது பாகிஸ்தான். இந்த நிலையில் தான் நேற்று ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். ஆஃப்கன் நாட்டில் பக்டிக்கா மாகாணத்தில் 7 கிராமங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதில் ஒரு கிராமம் முற்றிலும் உருகுலைந்ததாக ஆஃப்கன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கோர தாக்குதலால் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் மரணம் அடைந்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில், உயிர் பலி எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்தே பாகிஸ்தான் இந்த தாக்குதல் நடத்தியதாக கூறினாலும், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
The post எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. பாகிஸ்தானின் கொடூர தாக்குதலால் ஆஃப்கனில் பலி எண்ணிக்கை உயர்வு!! appeared first on Dinakaran.