அவர் கூறியதாவது: பாவங்களை போக்கவும், பாவ தண்டனையை நீக்கவும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் யூபிலி ஆண்டு தொடங்குகிறது. இந்த நன்னாளில் அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் நம்பிக்கையின் யாத்ரீகர்கள் ஆக வேண்டும். ஆயுதங்களின் சத்தத்தை அமைதியாக்கவும், உலகை ஆட்டிப்படைக்கும் பிளவுகளை கடக்கவும் தேவையான தைரியத்தை காண வேண்டும்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் அமைதி நிலவட்டும். அதை அடைவதற்கு தேவையான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கட்டும். மத்திய கிழக்கில் ஆயுதங்களின் சத்தம் ஓயட்டும். குறிப்பாக காசாவில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
அங்கு போர் நிறுத்தம் ஏற்படட்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படட்டும். பசி, போரால் சோர்வுற்றுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கப்படட்டும். பேச்சுவார்த்தை மற்றும் அமைதிக்கான கதவுகள் மோதல்களால் அழிக்கப்பட்ட பகுதி முழுவதும் திறக்கப்படட்டும். ஆப்ரிக்கா, மியான்மர், கொலம்பியாவில் அமைதி நிலவட்டும். சைபிரசில் பிரிவினை சுவர்கள் தகர்க்கப்படட்டும். நம் அனைவருக்காகவும் கடவுள் காத்திருக்கிறார். அவர் நுழைவாயிலில் நமக்காகக் காத்திருக்கிறார். அவர் நம் ஒவ்வொருவருக்காகவும் காத்திருக்கிறார்.
குறிப்பாக மிகவும் வலுவற்றவர்களுக்காக அவர் காத்திருக்கிறார், போராலும் பசியாலும் துயருறும் அனைத்துக் குழந்தைகளுக்காகவும் காத்திருக்கிறார், தனிமை மற்றும் கைவிடப்பட்ட சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்ட வயதுமுதிர்ந்தோருக்காக அவர் காத்திருக்கிறார். அவர் தனது இதயக் கதவை நமக்குத் திறந்தது போல, நம்முடைய இதயக் கதவுகளை அவருக்குத் திறப்போம். நம் எதிரிகளையும் அரவணைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
The post உலகெங்கும் அமைதி பரவட்டும் ஆயுதங்களின் சத்தம் ஓயட்டும்: கிறிஸ்துமஸ் உரையில் போப் வலியுறுத்தல் appeared first on Dinakaran.