மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 5வது நாளாக 3,500 கனஅடியாக நீர்வரத்து நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2,701 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,960 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.41 அடியிலிருந்து 119.46 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 92.61 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடிக்கும் கீழ் சரிந்ததால், முழு கொள்ளளவை எட்டுவது தாமதமாகி உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீர் சரிவு appeared first on Dinakaran.