மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை நபர் ஒருவருக்கு ரூ.2000 வீதம் 3032 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வருமான உச்சவரம்பின்றி கல்வித்தகுதி அடிப்படையில் ரூ.25000 மற்றும் தம்பதிகளில் ஒருவர் பட்டதாரியாக இருந்தால் ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் செல்லவும், இதர மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடத்திலிருந்து கல்லூரி, பணி, மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இலவச பேருந்து பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை 628 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
சுயதொழில் வங்கிக்கடன் ரூ.75000 பரிந்துரையுடன் ரூ.25000 மானியமும், ஆவின் பாலகம் அமைக்க ரூ.50000 மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கடந்த ஆண்டு 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 720 பயனாளிகளுக்கு ரூ.3.55 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், குன்றத்தூர் நகரமன்ற தலைவர் கோ.சத்தியமூர்த்தி, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.