தர்மபுரி, டிச.25: அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக கோரியும், காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஜனாதிபதிக்கு தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இந்த புகார் மனுவை கொடுத்தனர். முன்னதாக அவர்கள் ஊர்வலமாக சென்று, கலெக்டர் அலகத்தில் மனு கொடுத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வடிவேல், நகர தலைவர் வேடியப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், காளியம்மாள், வட்டார தலைவர்கள் சந்திரசேகர், மணி, ஞானசேகரன், வெங்கடாச்சலம், பெரிய சாமி, காமராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post தர்மபுரி கலெக்டர் ஆபீசில் காங்கிரசார் மனு appeared first on Dinakaran.