மானியத்துடன் கடன் வாங்கித் தருவதாக 217 பவுன் நகை, ரூ.89 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் வேல மரத்தூரை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (35). இவர், அந்தியூர், பவானி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களிடம் வங்கியில் விவசாய கடன் மானியத்துடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அந்தியூர் புது மேட்டூர் பகுதியை சேர்ந்த சசிகலா (35) என்பவரிடம் ரூ.9 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால் பணத்தை கொடுக்காததால் சசிகலா அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். விசாரணையில், கருணாமூர்த்தி 30க்கும் மேற்பட்டவர்களிடம் 217 பவுன் நகை, ரூ.89 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 22ம் தேதி அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்த கருணாமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

The post மானியத்துடன் கடன் வாங்கித் தருவதாக 217 பவுன் நகை, ரூ.89 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: