தென்னைகளை வேரோடு சாய்த்து துவம்சம் செய்ததுடன், தென்னங்குருத்துகளை சாப்பிட்டன. விவசாயிகள் வித்யாசாகர்,ஈஸ்வரசாமி, மணி, திருமலைச்சாமி, கார்த்திக்குமார், சிவராஜ் ஆகியோருக்கு சொந்தமான தோட்டங்களில் மொத்தம் 50 ஏக்கரில் தென்னைகளை முறித்து நாசம் செய்தன. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இந்த பகுதிக்கு இதுவரை யானைகள் வந்ததில்லை.காட்டுப்பன்றி தொல்லை காரணமாக இரவில் தோட்டசாளைக்கு வெளியே படுத்திருந்தோம். திடீரென நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டதால் அச்சமடைந்து, வீட்டுக்குள் சென்று படுத்தோம்.தோட்டங்களுக்குள் 4 யானைகள் புகுந்தன.
சுமார் 50 ஏக்கரில் தென்னைகளை முறித்தும், வேரோடு சாய்த்தும் சேதப்படுத்தி விட்டன. ஒரு மரத்துக்கு ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதுபற்றி வனத்துறையினருக்கு தெரிவித்தோம். இதுவரை வந்து பார்க்கவில்லை. ஒருமுறை யானை வந்தால் ருசிகண்டு அடிக்கடி வர வாய்ப்புள்ளது.எனவே, யானைகள் நிரந்தரமாக வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post திருமூர்த்திமலை சாம்பல்மேடு பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் 50 ஏக்கரில் தென்னைகள் நாசம் appeared first on Dinakaran.
