திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

திருவாரூ, டிச. 24: திருவாரூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 404 மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 404 மனுக்களை கலெக்டரிடம்அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து வழக்கம்போல் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் தோட்டக்கலைத்துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் அரசு கல்வி நிறுவனங்களுக்கும், அரசு மாணவியர் விடுதிகளுக்கும் ரூ.8 ஆயிரம் மானியத்தில் வீட்டுக்காய்கறி தோட்டம் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் 2024-2025 நிதியாண்டிற்கு 2 எண்கள் இலக்கு பெறப்பட்டதில், கிடாரங்கொண்டான் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக்கும், கொரடாச்சேரி வட்டாரம் பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும் காய்கறி விதைகளும், சான்றிதழ்களையும், கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க மளிகைப்பொருட்கள் அடங்கிய இனிப்பு பொங்கல் தொகுப்பு (ரூ.199), சிறப்பு பொங்கல் தொகுப்பு (ரூ.499), பெரும் பொங்கல் தொகுப்பு (ரூ.999) என்ற தொகுப்புகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

மக்கள்குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் நீதிமாணிக்கம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: