சாத்தூர், டிச.24: சாத்தூர் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் அம்பேத்காரை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் மனோஜ்குமார், தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவா ஆர்ப்பாட்டத்த்தை துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார், நகர் குழு செயலாளர் சரோஜா, சாமிநாதன், ஆதித்தமிழர் பேரவை மணிகண்டன் மற்றும் இந்தியா கூட்டனி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.